அதிகாலை நேரம் வெது வெதுப்பான காலைப் பொழுதில் இன்றைய நிகழ்ச்சிகள் குறித்த எண்ணங்களுடன் காலை உணவுக்காக நான் தங்கியிருந்த அறைக்கு முன்னால் இருந்த உணவகத்துக்குள் நுழைகிறேன். உணவுகளை தெரிவு செய்து கொண்டிருக்கும் போது, “can you buy me a coffee”, ஒரு குரல் என்னை திரும்பிப் பார்க்க வைக்கின்றது.
ஒரு ஆபிரிக்க அமெரிக்க பெண்மணி என்னைப் பார்த்து கேட்கிறாள். ஓரு கணம் மனம் தடுமாறியது. நான்கு வருட அமெரிக்க வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. மாணவர்கள் என்பதனால் நாம் தான் குறைந்த வருமானம் பெறுபவர்கள். எந்த உணவகத்திலும் மிக நீண்ட உணவு பட்டியலில் விலை குறைந்த உணவை பெற்று, முடிந்தவரை வீட்டில் சமைத்து உண்டு பழகிய வாழ்க்கைதான் என்னைப் போன்றவர்களுக்கு.
டொலர்கள் புரளும் தேசத்தில் இது வழமையானதோ என ஆயிரம் சிந்தனைகள் என்னுள் எழுந்தன. எனது கேள்விகள் எதற்கும் அவள் முகத்தில் பதில் கிடைக்கவில்லை. என்னிடம் கேட்டதை அவள் ஒருபோதும் அவமானமாகக் கருதவில்லை. கவுன்டரில் இருந்த பெண் அவளைப் பார்த்து கேட்டாள் ,
“ இன்று சண்ட்விச் சாப்பிடப் போகிறாயா?,
அவள் “ இல்லை, இன்று காபி குடிக்கப் போகின்றேன் ஆனால் என்னிடம் காசு இல்லை”.
ஏன் ? என்கிறாள். கவுன்டர் பெண்,
“என்னிடம் காசு இல்லை, எனக்கு தொழில் இல்லை “ என்கிறாள். அதற்குப் பரவாயில்லை என்கிறாள் கவுண்டர் பெண்.
அந்நேரம் எனது பில் தயாரகி விட்டது. அவளது கோபிக்கு நான் காசு கொடுக்கிறேன் என்று எனது மனது முடிவு எடுத்தாகி விட்டது. என்றாலும் அவள் சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் ரசிக்க என்னால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
அவள் இருந்த பக்கத்துக்கு எதிர்பக்கமாக போய் எனது உணவை விரைவாக முடித்து வெளியேறுகிறேன், இப்பதிவிற்கான வார்த்தைகளை நினைத்துக் கொண்டு…
சென்பிரான்சிஸ்கோ, உலகின் கனவு நகரம்.பணக்காரர்கள் நிறைந்த நகரம். அப்பிள், பேஸ்புக் என பில்லியன் டொலர்களில் புரளும் ஏராளமான நிறுவனங்கள், பல அடுக்குகளை கொண்ட வானை முட்டும் மாடிக் கட்டடங்கள். பிரமாண்டமே அடையாளமாக கொண்ட நகரம்.பேஸ்புக் வட்ஸ் அப் பை மூன்று பில்லியன்களுக்கு தன் வசமாக்கி கொண்டது என்பது தான் இன்றைய முக்கிய செய்தி.
காலையில் ஒரு கோபிக்கு வழியில்லா மனிதர்கள், ஒரு பொலிதீன் கவருடன் வீதியில் உறங்கும் மனிதர்கள். “can you spare a dollar for homeless” என்று வீதியெங்கும் கையேந்தும் மனிதர்கள். பணத்தின் பின் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. பெருநகரங்களில் கவனிக்கப்படாத மனிதர்களின் வாழ்க்கை என்பது நிழல் போல மிதிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.வறுமை மூன்றாம் உலகத்துக்குறிய ஒரு அடையாளமல்ல, முதலாளித்துவ கோபுரங்களுக்கு கீழேயே அது உறங்குகிறது. இந்த மனிதர்களை நின்று கவனிக்க யாருக்கும் நேரமில்லை. எப்படித்தான் முயன்றாலும் இந்த வாழ்க்கையுடனும் வாழ்வு முறையுடனும் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கோழைகளாகிவிட்டோம். சமரசம் என்கின்ற பெயரில் சதி செய்து கொண்டுவிட்டோம்.